யாழ். கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டு எச்சங்கள் குறித்து புதிய தகவல் 

Published By: Priyatharshan

18 Jul, 2018 | 10:41 AM
image

யாழ்.கோட்டையின் உட்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சம் போர்த்துக்கீசர் காலத்தினுடையதாக இருக்கலாம் என நம்புகின்றோம் என தொல்லியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

யாழ்.கோட்டையின்  உட்பகுதியினுள் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு பணிகளின் போது மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அது தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். 

அது குறித்து மேலும் தெரிவிக்கையில் , 

யாழ்ப்பாண கோட்டை அமைந்துள்ள பகுதியானது சோழர் காலத்திற்கு முற்பட்ட காலத்திற்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அதற்கான ஆதராங்கள் சில கிடைக்க பெற்றுள்ளன. 

கோட்டை அமைந்துள்ள பகுதிகளில் கடந்தவருடம் (ஸ்கானர் மூலம் ) ஆய்வுகளை மேற்கொண்ட வேளை கோட்டை அமைந்துள்ள பகுதிகளின் கீழ் போர்த்துக்கீசர் காலத்திற்கு முற்பட்ட வரலாற்று படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

இந்நிலையில் தற்போது அமெரிக்க பல்கலைகழகம் , யாழ். பல்கலைகழகம் , தொல்லியல் திணைக்களம் , மத்திய கலாச்சார நிலையம் என்பவற்றின் கூட்டு செயற்திட்டமாகவே இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

கோட்டையின் உட்புறமான மத்திய பகுதியில் முன்னதாக போத்துக்கீசர் காலத்து தேவாலயம் ஒன்று இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளான. தேவாலயத்திற்கு அருகில் கிணறு ஒன்று இருந்தமைக்கான சான்றுகளும் , தேவாலய சுவர்கள் இருந்தமைக்கான சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன. 

இந்நிலையிலேயே நேற்றைய தினம் அகழ்வுப் பணியின் போது மனித எழும்பு எச்சம் மீட்கப்பட்டன. அது போத்துக்கீசர் காலத்தில் அடக்கம் செய்யப்பட்டவரின் எலும்பு எச்சங்கள் என நம்புகின்றோம்.

ஏனெனில் போத்துக்கீசர் காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது மேற்கு நோக்கியவாறே அடக்கம் செய்யும் பழக்கம் இருந்தது. 

அதன் பின்னரான கால பகுதியில் தான் இறந்தவர்களை கிழக்கு திசை நோக்கி அடக்கம் செய்யும் பழக்கம் வந்தது. ஆகவே அவை போர்த்துக்கீசர் காலத்திற்கு உரியவையாக இருக்கலாம் என நம்புகின்றோம். 

ஆய்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு முதல் நாம் எதனையும் உத்தியோகபூர்வமாக செல்ல முடியாது. 

மீட்கப்பட்ட எலும்பு எச்சம் தொடர்பில் ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஆய்வுகளின் பின்னரே உத்தியோகபூர்வமாக தெரிவிக்க முடியும் என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09