இந்தியா இன்னமும் 2019 உலககிண்ணப்போட்டிகளிற்கு தயாராகவில்லை என இந்திய அணியின் தலைவர் விராட்கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா இழந்ததை தொடர்ந்து கோலி இந்த மதிப்பீட்டை முன்வைத்துள்ளார்.

2019 உலககிண்ணப்போட்டிகளிற்கு முன்னர் இந்திய அணி பதில் அளிக்கவேண்டிய சில கேள்விகள் உள்ளன என கோலி தெரிவித்துள்ளார்.

உலக கிண்ணத்திற்கு முன்னர் கவனம் செலுத்தவேண்டிய விடயங்கள் எவை என்பதை விராட்கோலி தெரிவிக்காத போதிலும் சில விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு அணியும் உலக கிண்ணப்போட்டிகளிற்கு முன்னர் பலவீனமான விடயங்களிற்கு தீர்வை காண்பதற்கு முயல்கின்றன, சரியான சமநிலை உள்ள அணியை உருவாக்க முயல்கின்றன என தெரிவித்துள்ள கோலி இவ்வாறான தொடர்கள் இவ்வாறான தோல்விகள் உலக கிண்ணப்போட்டிகளிற்கு முன்னர் நாங்கள் திருத்திக்கொள்ளவேண்டிய விடயங்கள் எவை என்பதை வெளிப்படுத்தும் எனவும் கோலி குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது போட்டியில் நாங்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடவில்லை 25 ,30 ஓட்டங்கள் குறைவாகவே பெற்றுள்ளோம் எனவும் கோலி குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியினர் பந்து வீச்சு துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பில் சிறப்பாக செயற்பட்டனர்,எனவும் கோலி குறிப்பிட்டுள்ளார்.