அதி சக்தி வாய்ந்த லேசர் கதிர் முறைமையின் மூலம் மூலம் சிறிய விண்கலமொன்றை 30 நிமிட நேரத்தில் செவ்வாய்க்கிரகத்தைச் சென்றடையச் செய்ய முடியும் என அமெரிக்க கலிபோர்னிய பல்கலைக்கழக பௌதிகவியலாளர் ஒருவர் உரிமை கோரியுள்ளார்.

கலிபோர்னிய பல்கலைக்கழகத்தின் யு.சி. சாந்த பார்பரா திணைக்களத்தைச் சேர்ந்த பௌதிகவியலாளரான பிலிப் லுபினே இவ்வாறு உரிமை கோரியுள்ளார்.

மிகவும் மெல்லிய கட்டமைப்பைக் கொண்ட இந்த ஆளற்ற விண்கலம் மணிக்கு 174.3 மில்லியன் வரையான வேகத்தில் பயணிக்கும் ஆற்றலைக் கொண்டது என அவர் கூறினார்.

எமது சூரிய மண்டலத்துக்கு மிகவும் அண்மையிலுள்ள நட்சத்திர மண்டலத்தை எவ்வாறு சென்றடைவது தொடர்பில் ஆய்வை முன்னெடுத்துள்ள பௌதிகவியலாளர் குழுவில் பிலிப் லுபின் அங்கம் வகிக்கிறார்.

லேசர் கதிர்கள் மூலம் ஏவப்படும் மேற்படி விண்கலம் ஒளியின் வேகத்திலும் கால் மடங்கு வேகத்தில் பயணிக்கும் ஆற்றலைக் கொண்டது என பிலிப் லுபின் கூறினார்.

அவர் இதற்கு முன்னர் 3 நாட்களில் பெரிய விண்கலம் ஒன்றின் உதவியுடன் செவ்வாய்க்கிரகத்தை சென்றடைய முடியும் என்ற கருத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.