உத்தரப் பிரதேசத்தில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பட்டதாரிகளும், பி.எச்டி., பட்டம் பெற்றவர்களும் துப்புரவு தொழிலாளர் பணிக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

துப்புரவு பணியாளர் பதவிக்கு வந்துள்ள விண்ணப்பங்களில் 19,000 பேர் பட்டதாரிகளாகவும், பட்ட மேற்படிப்பு முடித்தவர்களாகவும் உள்ளனர். 

இதேபோல தலைமை செயலக அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பி.எச்.டி முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.