இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும் இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று 5 மணியளவில் இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவருமாறு இந்திய அணியை பணித்துக் கொண்டது. இதன்படி முதலில் களம் புகுந்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான தவான் மற்றும் ரோகிக் ஜோடி மார்க் வூட் வீசிய முதல் ஓவரில் எந்த விதமான ஓட்டத்தையும் பெறாமல் தடுமாறியது. 

அணியின் ஓட்ட எண்ணிக்கை 5. 4 ஓவரில் 13 ஆக இருக்கும் போது 18 பந்துகளுக்கு 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் வில்லி வீசிய பந்தில் பிடிகொடுத்து ஆட்டமிழந்து சென்றார் ரோகித் சர்மா. அதன் பின்னர் களம் புகுந்தார் அணியின் தலைவர்.

இருப்பினும் இந்திய அணி மந்த கதியிலேயே ஓட்ட எண்ணிக்கையை குவிக்க ஆரம்பித்தது. 10 ஓவர்களின் நிறைவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 33 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

அதன் பின்னர் 12 ஆவது ஓவரை வீச பிளண்கட் பந்தை எடுத்த போது இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை சற்று அதிகரித்தது. காரணம் பிளண்கட்டின் ஓவரில் தவான் அடுத்தடுத்து மூன்று நான்கு ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து 17.4 ஆவது ஓவரில் தவான் 49 பந்துகளுக்கு 44 ஓட்டங்களை பெற்று ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த தினஸே் கார்த்திக் எதிர்கொண்ட முதல் பந்திலேயே நான்கு ஓட்டத்தை விளாசி அசத்தினர்.

அதன் பின்னர் இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 100 ஓட்டங்களை கடந்தது. துடுப்பாட்டத்தில் நிதானமாகவும் நுணுக்கமாகவும் ஆடி வந்த அணித் தலைவர் விராட் கோஹலி 23.4 ஆவது பந்தில் நான்கு ஓட்டம் ஒன்றை பெற்றுக் கொண்டு அரைசதம் கடந்தார். 

இந் நிலையில் 24.2 ஓவரில் தினேஸ் கார்த்திக் 22 பந்துகளுக்கு 21 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரஷித்துடைய பந்தினை எதிர்கொள்ள முடியாது போல்ட் முறையில் ஆட்டமிழந்து களம்நீங்கினார்.

அதன் பின் விராட் கோஹலியுடன் கைகோர்த்தார் தோனி இருவரும் இணைந்து நிதானமாக துடுப்பெடுத்தாடி இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க ஆரம்பித்தனர் இருப்பினும் 30.1 ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கையனாது 156 ஆவ விருந்தபோது விராட் கோஹலி ரத்துடைய சுழலில் சிக்கி 71 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

அவரையடுத்து வந்த ரய்னாவும் கூடிய நேரம் தாக்குப் பிடிக்காமல் அதே ஓவரில் மூன்று பந்துகளை எதிர்கொண்டு ரூட்டிடம் பிடி கொடுத்து ஆடுகளம் விட்டு நீங்கினார். இவரைத் தொடர்ந்து பாண்டியா 38.2 பந்தில் 21 ஓட்டங்களை பெற்றவேளை ஆட்டமிழந்தார்.

இந்திய அணி ஒரு கட்டத்தில் 45 ஆவது ஓவர் நிறைவின் போது 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்து ஓட்டங்களை குவிக்க தடுமாறிக் கொண்டிருந்த வேளை இந்திய ரசிகர்கள் தோனி இருக்கிறார் இறுதி ஐந்து ஓவர்களுக்கும் அடித்தாடுவார் என்ற எதிர்பார்ப்பு பிருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பினை 45.5 ஆவது பந்தில் கலைத்த தோனி 42 ஓட்டங்களுடன் வில்லி வீசிய பந்தில் பட்லரிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

தோனி ஆட்டமிழந்து வெளியேறிய சோகத்திலிருந்து இந்திய ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக அடுத்து களமிறங்கிய சர்துல் 48 ஓவரில் இரண்டு ஆறு ஓட்டங்களை விளாசினார்.

இறுதியாக இந்திய அணி நிர்யணிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்கள‍மைாத்திரம் பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ரஷித், வில்லி தலா‍ 3 விக்கெட்டுக்களையும் மார்க் வூட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்