(நா.தினுஷா)

தேசிய அரசாங்கத்தில் உள்ள முரண்பாடுகளை நிவர்த்தி செய்து கொள்வதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்துணர்வுடன் செயற்படுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்தள்ளார்.

அத்தோடு விஜயகலா மகேஸ்லரன் அரசியல் சுயநலத்துக்காகவே விடுதலை புலிகளின் மீள்வருகை தொடர்பில் கருத்து தெரிவத்தார் எனவும் குறிப்பிட்டார். 

ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டடில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். 

தொடர்ந்து அவர் பதலளிக்கையில், 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து அமைத்த இந்த நல்லாட்சி அரசாங்கம் தனது பணிகளை மேற்கொள்வதில் ஆரம்பத்தில் முரண்பாடுகள்பாடுகள் காணப்பட்டிருப்பினும், தற்போது அதற்கான தீர்வு கிடைக்பெற்றுள்ளது. 

இரு பிரதான கட்சிகளின் தலைவர்களும் மக்களுக்கு சேவை வழங்கும் போது ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கிராம சக்தி மற்றும் கம் பெரலிய போன்ற வேலைத்திட்டங்கள் இரு பிரதான கட்சிகளும் இணைந்தே மேற்கொண்டு வருகின்றன.

மேலும் என்ட பிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாக குற்சாட்டுக்கள் எழுகின்றன. கடன் தொகைகளை அதிகரித்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதால் நாட்டின் பொருளாதாரம் செலிப்படைய போவதி;ல்லை. நாட்டின் உற்பத்தி விகிதம் அதிகரிக்க வேண்டும். உற்ப்பத்தி வீதம் அதிகரிக்கப்பட வேண்டுமானால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பணிகளை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான ஊக்குவிப்பு பணிகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. 

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஆழ்ந்த உரையாடலொன்றினை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். சிங்கபூர் வர்த்தக ஒப்பந்தத்தினூடாக நாட்டுக்கு எதவாது பாதகம் ஏற்படுமாயின் அது தொடர்பில் ஆழ்ந்து ஆராய்ந்நதன் பின்னரே அவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட எதிரபார்க்கின்றோம். 

அவ்வாறே, விஜகலா மகேஷ்வரனின் கூற்று உண்மையில் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் வட பிரதேசத்துக்கும் வடமக்களுக்கும் சேவைபுரிவதற்காகவல்ல. தனது அரசியல் நடவடிக்கைகளுக்காகவும் தேர்தல்களின் போது மக்களின் வாக்குகளை பெற்று கொள்வதற்காக மாத்திரமேயாகும். 

வடக்கு பிரதிநிதிகள் பிரபாகரன் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என குறிப்பிட்டவுடன் தெற்கிலுள்ள பிரதிநிதிகள் அதற்கு எதிரப்பினை வெளியட்டு மக்களின் வாக்குகளை பெற்றுகெரள்ளவே எதிரபார்க்கின்றனர்.இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை இல்லை. விஜயகலா மகேஸ்வரனின் கூற்று பொய்யானது. அரசியலமைப்புக்கு மரான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றார்  .