நாளுக்குநாள் உலகில் சமூகவலைத்தளங்களில் பாவனையாளர்களின் பிரத்தியேக தரவுகளின் பாதுகாப்பானது கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்றது. அண்மையில் கூட பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பாவனையாளர்களின் தரவுகள் வேறு ஒரு நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் பேஸ்புக் நிறுவுனர் கூட தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சமூகவலைத்தளங்களின் பாதுகாப்பென்பது மிக முக்கிய விடயமாக காணப்படுகின்றதால், பாவனையாளர்கள் மத்தியில் “சமூகவலைத்தளங்களில் பிரத்தியேக தரவுகளின் பாதுகாப்பு” என்பது மிகவும் அத்தியாவசியமானதொன்றாகக் காணப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் Viber அண்மையில் ஒரு பில்லியன் பாவனையாளர்களை கடந்துள்ளது. குறிப்பாக தென்கிழக்காசிய பிராந்திங்களில் Viber பாவனையாளர்கள் அதிகமாக உள்ளனர். இலங்கை, நேபளம், பிலிப்பைன்ஸ், மியன்மார், வியட்நாம் ஆகிய நாடுகளில் Viber மிகவும் உறுதியான சமூகவலைத்தளமாக காணப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளிலும் Viber சமூக வலைத்தளத்தின் பாவனை ஓரளவு காணப்படுகின்றது. Viber தற்போது தனது பாவனையாளர்களின் நன்மை கருதியும் அவர்களின் தரவுகளுடைய பாதுகாப்பு கருதியும் app ஒன்றினை உருவாக்கியுள்ளது. 

இந்த app இல் பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் Viber பாவனையாளர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு Viber உடைய தரவுகளை பாதுகாக்கும் செயற்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

Viber ஆனது பாவனையாளர்களின் நன்மை கருதி பல வகையான சலுகைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக Viber இல் காணப்படும் Viber stickers களை அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்களே வடிவமைத்துள்ளனர். Viber ஆனது எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள செய்தி நிறுவனங்களுடன் இணைந்து செய்திச்சேவையை தனது பாவனையாளர்களுக்கு வழங்குவதற்கு எண்ணியுள்ளது. இதனால் பாவனையாளர்களுக்கும் Viber க்குமிடையில் மிக நெருங்கிய உறவு பேணப்படுவதுடன் பாதுகாப்பு உத்தரவாதம் தொடர்பில் நெருக்கம் ஏற்படும். 

இலங்கையில் பாவனையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் உறுதியான இணைப்புக்களை Viber சமூக வலைத்தளமானது தற்போது உறுதிசெய்துள்ளது. பாவனையாளர்களின் பிரத்தியேக தரவுகளின் பாதுகாப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலங்களில் பெரும் சர்ச்சைகள் இடம்பெற்று வந்தன. இது பலராலும் கேள்விக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், சர்வதேச தகவல் மற்றும் குரல் app என்பது Viber பாவனையாளர்களின் தரவுகள் பாதுகாப்பானதாகவும் பிரத்தியேகமானதாகவும் முன்னெடுப்பதற்கான படிமுறைகளை முன்னெடுத்துள்ளது.

சகல பாவனையாளர்களுக்கும் encryotion ஊடாக சுய பாதுகாப்பு வழங்கப்படுவதை Viber தற்போது உறுதிசெய்துள்ளது. Viber இன் end - to -end - encryption ஊடாக சகல குரல் அல்லது வீடியோ அழைப்புக்கள், தகவல்கள், வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு உறுதியான பாதுகாப்பு வழங்கப்படுவது உறுதிசெய்யப்படுகின்றது. 

இந்நிலையில் தனிப்பட்ட அனுப்புகைகளிலும் Viber இனால் அவற்றை பார்வையிடவோ வாசிக்கவோ அல்லது அணுகவோ முடியாது. இந்த end - to -end - encryption என்ற உள் அம்சம் செயற்படுத்தப்படும் முதல் நியமமாக Viber அமைந்துள்ளது.

Viber ஆனது ஏனைய சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய app ஆகியவற்றை விட தனித்துவமானது பாதுகாப்பானது. இலங்கையில் Viber பாவனையாளர்களில் தமிழ் மொழி மூல பாவனையாளர் அதிகமானோர் இருப்பதால் எதிர்காலத்தில் Viber மூலம் செய்திகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கணனி அல்லது கையடக்கத்தொலைபேசியொன்றிலிருந்து Viber தகவல் ஒன்று அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் பெறுநரின் சாதனத்துக்கு அது ஒரு சிக்கலான குறியீடாக சென்றடையும் பெறுநரின் சாதனத்தில் மாத்திரமே அதனை சரியான முறையில் மாற்றியமைக்கக் கூடிய உள்ளம்சம் காணப்படுகின்றது.

இந்நிலையில் தகவல் சென்றடைந்ததும் Viber இன் server களில் தரவுகள் எதுவும் சேமித்து வைக்கப்படமாட்டாது. உபயோகிக்கும் சாதனம் நிறுத்தப்பட்டிருந்தால் Viber இல் encrypted தகவல் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதிக்கு சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். இது அவர்களால் தமக்கு அனுப்பப்பட்டதை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இதன் பயனாக பாவனையாளர்களுக்கு தமது தனிப்பட்ட தொடர்பாடல்கள் தொடர்பில் எவ்வித ஐயத்தையும் கொள்ள வேண்டியதில்லை Viber தினசரி தனது பாவனையாளர்கள் சிறந்த முறையில் தொடர்பாடல்களை பேணுவதை உறுதி செய்வதை மேற்கொள்வதுடன் தொடர்புகளின் இரகசியத்தையும் பாதுகாப்பு செயன்முறையினூடாக உறுதிபடுத்தப்படுகின்றது.

இந்நிலையில் சமூகவலைத்தளப் பாவனையாளர்கள் Viber இல் பெறப்படும் சேவைகளுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும்.