ரஸ்யாவிற்காக உளவு பார்த்தார் எனவும் அமெரிக்கா ரஸ்ய பெண்மணியொருவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

மரியா புட்டினா அமெரிக்காவின் தேசிய துப்பாக்கி சங்கத்தில் இணைந்து அதன் மூலம் குடியரசுகட்சிமீதும் அமெரிக்க அரசியல் மீதும் செல்வாக்கு செலுத்த முயன்றார் என அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இவரை கைதுசெய்துள்ளதை தற்போது பகிரங்கப்படுத்தியுள்ள அதிகாரிகள் எவ்பிஐ அதிகாரிகள் அவரின் மடிக்கணிணி கையடக்கதொலைபேசி ஆகியவற்றை சோதனையிட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவிற்கு எதிராக மரியா சதிமுயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை அமெரிக்க நீதி திணைக்களம் முன்வைத்துள்ளது.

அமெரிக்க அரசியல்வாதிகளையும் வேட்பாளர்களையும் அடிக்கடி சந்தித்த மரியா  அவர்கள் மூலம் பெற்ற தகவல்களை மொஸ்கோவிற்கு தெரிவித்துள்ளார் என அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

29 வயதான மரியா அமெரிக்கர்களுடன் உறவுகளை ஏற்படுத்தினார்,அமெரிக்க அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அமைப்புகளிற்குள் ஊருடுவினார் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் ரஸ்யாவின் நலனை முன்னெடுப்பதற்காகவே அவர் இவ்வாறு செய்தார் எனவும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா ரஸ்ய ஜனாதிபதிகளிற்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்று சில மணி நேரத்திற்குள் ரஸ்ய பெண்மணி மீது அமெரிக்க அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.