35 ஆவது நாளாகவும்  மனித எலும்புகள் அகழ்வு பணி தொடர்கிறது

Published By: Daya

17 Jul, 2018 | 04:10 PM
image

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 35ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில்  இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை தாங்கிவருகின்றார்.

மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வில் விரிவுப்படுத்தப்பட்ட இடத்தில் இன்றும் மனித எச்சங்கள் தென்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வின்போது கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து இது சம்பந்தமாக சட்ட ரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இப் பகுதியில் அகழ்வுப் பணி இடம்பெற்று வருகின்றது.

குறித்த பணியானது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள் மண்டையோடுகளை வெளியேற்றும் நோக்குடன் துப்பரவு செய்யும் பணியும் அத்துடன் இவ்விடத்துக்கு அருகாமையிலுள்ள நடைப்பாதையில் ஐந்து அடி அகழ்வுக்காக விரிவுபடுத்திய இடத்திலேயும் இன்று அகழ்வு இடம்பெற்றது.  இன்று இடம்பெற்ற புதிய இடத்திலும் மனித எச்சங்கள் தென்பட்டன.

இது வரைக்கும் 40 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் 27 எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளியேற்றப்பட்ட எலும்புக்கூடுகள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு பாதுகாப்பாக மன்னார் நீதிமன்றிலுள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

திருட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள்...

2024-04-18 13:21:31