புதிய அரசியலமைப்பானது உருவாக்கப்பட்டால் நாடு ஒன்பது துண்டுகளாக பிளவடையும் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை என்ற மரத்தில் ஒவ்வொரு மரக்கிளைகள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அத்துடன் வரலாறு அடையாளம் காணமுடியாத சூழ்ச்சிக்கான தளத்தினை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. 

மேலும் தற்போது புதிய அரசியலமைப்பினை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் நாடு ஒன்பது துண்டுகளாக பிளவடையும் வாய்ப்புள்ளது.

எனவே இந்த அரசாங்கத்திற்கு எதராக அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.