சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போரை நிறுத்துவது தொடர்பில் ஏற்பட்ட சர்வதேச உடன்பாடானது நேற்று அமுலுக்கு வந்துள்ளது.

தலைநகர் டமாஸ்கஸ் இல் குண்டுகளின் ஓசை ஓய்ந்திருப்பதாகவும், அங்கு அமைதிநிலை நீடித்துவருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், லட்டாக்கியா போன்ற சில நகரங்களில் ஆங்காங்கே கிளர்ச்சிக் காரர்களுக்கும் அரச படையினருக்குமிடையில் சண்டைகள் நடந்து வருவதாகவும் தெரிகின்றது.

போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா ஆயுதக்குழுக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் அல்-நுஸ்ரா ஆயுதக்குழுக்கள் மீது தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்காவும் ரஷ்யாவும் தெரிவித்துள்ளன.

இந்தப் போர்நிறுத்தத்திற்கான அமைதிப் பேச்சுவார்த்தை மார்ச் 7ஆம் திகதி நடைபெறுமென சிரியாவுக்கான ஐ.நா.சிறப்புத் தூதர் ஸ்டெஃபான் டிமிஸ்டூரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.