போதைப்பொருள் குற்றவாளிகளின்  தூக்குத்தண்டனை விபரப்பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளவர் ஒரு பெண் என நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் குற்றவாளிகளின் பெயர் விபரப் பட்டியல் சிறைச்சாலை திணைக்களத்தினால் நீதியமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது குறித்த பட்டியலில் இருந்து  தூக்கிலிடப்படப்போகும் முதல் 18 பேரின் விபரம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த பட்டியலில் முதலாவது இடத்தில் இருப்பவர் ஒரு பெண் என்றும் அவர் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முக்கிய நபரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.