(இரோஷா வேலு) 

நாரமல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லங்குவ பதிகயில் கடந்த ஞயாற்றுக்கிழமை இரவு கத்திக்குத்துக்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாரமல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கல்லங்குவ பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் கணவனால் மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகிய மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் நாரமலையைச் சேர்ந்த 24 வயதுடைய இஷார கிம்மானி என்பவராவார்.

அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.