இலங்கையில் கசினோ மூலம் பெற்ற பெருந்தொகை வெளிநாட்டுப் பணத்துடன் விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர்கள்  நால்வரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நால்வரில் இருவர் சீனப் பிரஜைகள் எனவும் ஏனைய இருவரும் நேபாள நட்டவர்கள் எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீன நாட்டவர் 30 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும் நேபாள நாட்டவர்கள் இருவரும் 20 மற்றும் 25 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு குறித்த பணத்தை பயணப்பொதி மற்றும் காற்சட்டை பைக்குள் மறைத்து வைத்தக்கொண்டு செல்லும் போதே சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டது 169,900 அமெரிக்க டொலர் எனவும் அவற்றின் பெறுமதி 2,75,24,000 ரூபாவெனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கு வந்து கசினோ விளையாட்டின் மூலம் பெறப்பட்ட பணம் என அவர்களிடம் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நால்வர் மீது விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது