போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் சமூக அமைப்புகள் மத அமைப்புகளின் பின்னால் மறைந்துள்ளனர் என தெரிவித்தமைக்காக நிதியமைச்சர் மங்களசமரவீர மன்னிப்பு கோரியுள்ளார்.

கவனக்குறைவால் நான் லயன்ஸ் கழகம் ரோட்டரி கழகம்போன்றவற்றையும் குறிப்பிட்டுவிட்டேன் இதற்காக வருந்துகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் உள்நோக்கங்களுடன் இவ்வாறான அமைப்புகளில் இணையும் சிலர் இருக்கலாம்,எனினும் இது ரோட்டரிக்கழகம் போன்ற அமைப்புகள் பல வருடங்களாக தொடர்ந்து முன்னெடுத்தும் வரும் உன்னதமான தொண்டின் கௌரவத்தை எந்த வகையிலும் குறைக்காது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனது கருத்து பலரிற்கு கவலையை அளித்திருக்கலாம் என்பதை நான் புரிந்துகொண்டுள்ளேன்,இதற்காக நான் மன்னிப்பு கோருகின்றேன் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.