(இரோஷா வேலு) 

மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலய வீதிக்கு அண்மையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவரை மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே அவர் கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 10.200 மில்லிகிராம் ஹெரோயினையும் மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 46 வயதுடைய களனி பகுதயைச் சேர்ந்தவர் ஆவார்.

அத்துடன் இவரை இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.