பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று மாலை சிங்கப்பூர் சென்றுள்ளார்.

சுகயீனம் காரணமாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை நலன் விசாரிப்பதற்காக, அவர்இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.