பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

பேராதனை பல்கலைகழக பொறியியல் பிரிவு மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதாயின்  80 வீத வரவு இருக்கும் பட்டசத்தில் தான் பரீட்சைக்கு தோற்றமுடியும், இந்நிலையில் அவ்வாறு கணிப்பீடு செய்யாமல் பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்குமாறுகோரி சில மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையிலேயே பொறியியல் பீடத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தற்போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாணவர்களின் வருகை 80 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற அனுமதி வழங்கப்பட மாட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது