உள்ளுர் ஊடகங்கள் எதிர்மறையான விடயங்களிற்கே முக்கியத்துவம் வழங்குகின்றன சாதகமான நல்ல செய்திகளிற்கு முக்கியத்துவம் வழங்குவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிக்கவரெட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் சாதகமான விடயங்களிற்கோ அல்லது வாழ்வில் வெற்றியடைந்தவர்கள் கதைகளிற்கோ முக்கியத்துவம் வழங்குவதில்லை என தெரிவித்துள்ள பிரதமர் பகிரங்கமாக யாராவது கண்ணீர் விட்டாலோ அல்லது அரசாங்கத்தை விமர்சித்தாலோ அதற்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவத்தை வழங்குகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாம் ஆரம்பித்துள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஊடகங்கள் எந்த செய்தியையும் வெளியிடப்போவதில்லை இது குறித்து நான் பந்தயம் கட்டுகின்றேன் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்களை பார்த்து ஊடகங்கள்  பொறமைப்படுகின்றனவா எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்

ஊடகங்கள் முந்தைய அரசாங்கத்தை பற்றி பேசுகின்றன புகழ்பாடுகின்றன எனவும் தெரிவித்துள்ள பிரதமர் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்ட அந்த காலத்தை ஊடகங்கள் விரும்புகின்றனவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்

அரசாங்கத்தை விமர்சிக்காமல் ஊடகங்கள் நீடிக்கமுடியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.