இத்தாலிக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தினை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து ஜோர்ஜியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஜோர்ஜியாவில் இடம்பெறவுள்ள திறந்த பொது பங்களிப்பு தொடர்பான தலைவர்களுக்கிடையிலான மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மேற்கண்ட விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்யை தினம் உரோமில் நடைபெற்ற உகல வனப் பாதுகாப்பு குழுவின் 24 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.