LRT திட்டத்தால் மாலபேயில் முதலீடு செய்வதற்கு “Nivasie ”  சிறந்த தெரிவு 

Published By: Priyatharshan

17 Jul, 2018 | 09:51 AM
image

மாலபே நகரில் தகவல் தொழில்நுட்பம், உயர் கல்வி, சுகாதார பராமரிப்பு, வாழ்க்கைத்தரம் போன்ற துறைகளில் அதிகளவு முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றமையால் இந்தப் பகுதியில் அதிகளவு இடவசதிக்கான கேள்வி காணப்படுகிறது.

மிகவும் முக்கியமாக, சகல வசதிகளையும் தன்னகத்தே கொண்டு, மையப்பகுதியாக அமைந்திருக்கின்றமை ஏனைய பகுதிகளிலிருந்து பெருமளவானோர் இப்பகுதிக்கு விஜயம் செய்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணம் மற்றும் வெளிச்சுற்று நெடுஞ்சாலையின் நிர்மாணம் ஆகியவற்றுடன் கொழும்பு – மாலபே இடையில் Light Rail Transit (LRT) தொடரூந்து சேவையை நிறுவுவதற்கான அனுமதியையும் இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தது. 

இதனூடாக எதிர்காலத்தில் இந்தப் பகுதி பெருமளவு மாற்றத்தை எதிர்கொள்ளும். இந்த திட்டம் பூர்த்தியடைந்ததும் கொழும்பு நகரிலிருந்து மாலபேயை 27 நிமிடங்களில் சென்றடையக்கூடியதாக இருக்கும் என குறிப்பிட்டார்.

மேலும், இதுபோன்ற தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கு மாலபே பகுதியில் இடவசதி இன்மையை குறிப்பிடலாம். எஞ்சிய பகுதிகள் அனைத்தும் அரசாங்கத்தின், மெகாபொலிஸ் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப மையத்தை நிறுவுவதற்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது.

ஓர்கிட் மாலபே திட்டம், 22 ஏக்கர் பரப்பில் மாலபே நகரில் அமைந்துள்ளது. இதில் இல்லங்கள் மற்றும் தொடர்மனை ஆகியன அடங்கியுள்ளதுடன், மூன்றாவதும் இறுதிக்கட்ட நிர்மாணப்பணிகள் ஆண்டன் முற்பகுதியில் பூர்த்தியடைந்திருந்ததுடன் சொத்துக்கள் சந்தையை பொறுத்தமட்டில் சிறந்த முதலீட்டு தெரிவாக அமைந்துள்ளது. சிறந்த பிரதிபலன்களை உரிமையாளர்களுக்கு வழங்குகிறது.

முன்னணி வீடமைப்பு நிறுவனமான நிவாஸி டிவலப்பர்ஸ் மற்றும் அதன் தாய் நிறுவனமான இன்டர்நஷனல் கொன்ஸ்டரக்ஷன் கொன்சோர்டியம் பிரைவட் லிமிட்டெட் (ICC) ஆகியன இணைந்து இந்த தொடர்மனை நிர்மாண நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்த திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் 160 அலகுகள்ரூபவ் நீச்சல் தடாகம், நடக்கும் பகுதிகள் மற்றும் பாரிய திறந்த பகுதிகள் போன்றவற்றுடன் சூழ பச்சை வயல்வெளிகளும் அடங்கியிருக்கும் பல முன்னணி மற்றும் இரண்டாம் நிலை பாடசாலைகள்ரூபவ் உயர் கல்வி நிலையங்கள்ரூபவ் வைத்தியசாலைகள், திணைக்களங்கள் மற்றும் சௌகரியமான விற்பனை நிலையங்கள், உணவகங்கள், வங்கிக்ள் மற்றும் நிதிச்சேவைகள், தொழில்நுட்ப நிலையங்கள் போன்றன மாலபே நகரில் அமைந்துள்ளன. எதிர்காலத்திலும் இவை நிறுவப்படும். பச்சைப்பசேலென சுற்றுப்புறச் சூழல், பசுமையான காற்று, குறைந்த இரைச்சல் மற்றும் ஓய்வெடுக்க உகந்த பகுதி போன்றன நகருக்கு அப்பாலான வாழ்க்கைக்கு சிறந்த பகுதியாக அமைந்துள்ளது.

நிவாஸி மற்றும் ICC ஆகியன இணைந்து பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளன. இதனூடாக நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி துறையில் மைல்கற்களை பதிவு செய்துள்ளன. 35 வருடங்களுக்கு மேலான உயர் மற்றும் பரந்த அனுபவத்துடன் நாட்டின் முன்னணி நிர்மாண நிறுவனமாக ICC திகழ்கிறது. உயர் தரத்தை பேணுவதுடன், உரிய காலத்தில் விநியோகத்தையும் மேற்கொண்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57