(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தில் தனியான குழுவாக இயங்கிக் கொண்டு தங்களை  கூட்டு எதிரணி என்று சொல்லிக்  கொள்பவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோர எவ்விதமான தார்மீக உரிமையும் கிடையாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன்  தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

இன்று கூட்டு  எதிரணியினர் என்று தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்றத்திற்குள்  இயங்குகின்றவர்கள்  சகலரும் 2015 ஆம் ஆண்டின் பொது தேர்தலில்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களாக  போட்டியிட்டு தெரிவானவர்களே.

அவர்கள்  முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவிற்கு  தரகராக செயற்பட்டு கொண்டு  தனியான அணியாக செயற்பட்டு கொண்டிருந்தாலும் இப்படையில் அவர்கள் சட்ட ரீதியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  சார்பானவர்களே .

அம் முன்னணியினர்  ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து  அரசாங்கத்தை அமைத்திருக்கும் நிலையில் அதன் உறுப்பினர்களாக இருக்ககூடிய எவரும் எதிர்கட்சி தலைவர் பதவியை கோருவதற்கு உரிமை அற்றவர்கள் என்றார்.