ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர்  பிரசன்னா நாணயக்கார மற்றும் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகதபால ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இருவருக்கும் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. 

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்பில் குறித்த இருவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்த நிலையில் குறித்த இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அத்திட்டிய பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.