மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவு கதிரவெளியிலுள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கதிரவெளி புதூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான மூன்று வயது குழந்தையின் தாயுமான குடும்பப் பெண்  சுந்தரமூர்த்தி சுதர்ஷினி  என்பவரின் சடலமே இன்று மீட்கப்பட்டுள்ளது.

சடலம் உடற்கூறாய்வுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.