இந்தியாவிலிருந்து  இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்த முயன்ற ஒருத்தொகை கஞ்சாவுடன் இதியர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்த நால்வரையே இவ்வாறு கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடமிருந்து 40 கீலோகிரேம் கஞ்சாவுடன் அவர்கள் பயணித்த படகையும் பறிமுதல் செய்துள்ளனர். அத்தோடு குறித்த நபர்களால் கடலில் வீசப்பட்ட 200 கிலோ கஞ்சாவையும் இலங்கை கடற்படையினர் தேடி வருகின்றனர்