(எம்.மனோசித்ரா)

சட்டவிரோதமான முறையில் டுபாயிலிருந்து இலங்கைக்கு சுமார் 18 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை கொண்டு வந்த இருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 33 மற்றும் 45 வயதுடைய கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களிடமிருந்து 29 தங்க பிஸ்கட்டுக்களை கைப்பற்றியுள்ளதாகவும் சுங்க திணைக்கள ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.