முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ள முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கைக்குண்டு உள்ளிட்ட பல யுத்த உபகரணங்களை மீட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீளக் குடியமர சென்ற ஒருவர் தமது காணியை சுத்திகரித்துக் கொண்டிருக்கும்போதே புதைக்கப்பட்ட நிலையில் குறித்த ஆயுதங்கள் இருப்பதை கண்டுபிடித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிதற்கிணங்க பொலிஸார் குறித்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்க்கப்பட்ட ஆயுதங்களில் ஆர்.பி.ஜி.குண்டுகள், இரண்டு கைக்குண்டுகள் மற்றும் விடுதலை புலிகளினால் தயாரிக்கப்பட்ட மூன்று கைக்குண்டுகளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.