பண்டாரவளை பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் போலி சிகரெட்டுகள், போதைத் தரக்கூடிய  லேகியப் பொருட்கள் மற்றும் உப்பு பக்கற்றுகளை பண்டாரவளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் மேற்படி முற்றுகையை மேற்கொண்டிருந்தனர். மேற்குறிப்பிட்ட பொருட்களை மீட்ட பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர்.

குறித்த வர்த்தக நிலையமொன்றினை சுற்றி வளைத்த பண்டாரவளை பொலிஸார் 2500 போலி சிகரெட்டுக்களையும் 300 பக்கற்றுகள் கொண்ட போதை தரக்கூடிய லேகிய பொதிகளையும் கழிவறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உப்பு பக்கற்றுகள் கொண்;ட பொதிகளையும் மீட்டுள்ளனர்.

இவர்களை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.