முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மருத்துவ சிகிச்சைகளுக்காக அமெரிக்க செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

இதன் பிரகாரம் எதிர்வரும்  ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கிடையில் அமெரிக்கா செல்வதற்கு முன்னாள் அமைச்சருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

திவிநெகும திணைக்களத்தின் நிதியை பயன்படுத்தி ஜி.ஐ. குழாய்களை விற்பனை செய்து அவற்றை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.