மகாண அமைச்சரவை தொடர்பில் விவாதிப்பதற்காக வட மமாகாண சபையின் விசேட அமர்வு கைதடியிலுள்ள பேரவைக் கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்று வருகின்றது.
இன்றைய அமர்வில் கலந்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அவைத் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, வட மாகாண சபையின் சில அமைச்சர்களும் இன்றைய அமர்வில் கலந்துகொள்ளவில்லையென்று எமது செய்தியாளர் குறிப்பிட்டார். மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், விவசாயத்துறை அமைச்சர் சிவனேசன், சிவாஜிலிங்கம் ஆகியோர் வருகை தரவில்லையென அவைத் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.
வடமாகாண அமைச்சரவை தொடர்பில் எழுந்துள்ள சிக்கலை விவாதிக்கும் வட மாகாண சபையினுடைய 121 ஆவது அமர்வு விசேட அமர்வாக இடம்பெற்று வருகின்றது.
இந்த அமர்வில் ஆரம்பத்தில் 22 உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர். ரெலோ உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், சுகாதார அமைச்சர் குணசீலன் , குகதாஸ், புவனேஸ்வரன் ஆகியோர் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
இந்த விவாதத்தால் எவ்வித நன்மையும் இல்லை. கருத்து மோதல்களுக்கே இது வழிவகுக்கும் எனத் தெரிவித்து இவர்கள் வெளிநடப்பிலீடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM