2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் பாவனைப் பொருட்கள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சனத்தொகை புள்ளிவிபரத்திணைக்களம் உறுதி செய்துள்ளது.

மரக்கறி வகைகள், பச்சை மிளகாய், மீன் வகைகள், யோக்கட், முட்டை, தேங்காய், பெரிய வெங்காயம் போன்ற பொருட்களே இவ்வாறு விலை உயர்ந்துள்ளது.

விலையில் மாற்றம் ஏற்பட்ட போதிலும் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருந்த பெரிய வெங்காயம், தேசிக்காய், கிழங்கு, நெத்தலி, பருப்பு, பால்மா வகைகள் கோழி இறைச்சி போன்ற உணவு பொருட்களின் விலைகள் குறைந்த போதிலும் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் இப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சனத்தொகைப் புள்ளிவிபரத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.