நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில வீதிகளின் தன்மை வழமைக்கு மாறாக காணப்படுவதால் வாகனங்களை சாரதிகள் மிகவும் அவதானமாக செலுத்துமாறு வீதி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக தெற்கு அதிவேக வீதியூடாக பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் மிகுந்த அவதானத்துடனும் 60 கிலோமீற்றருக்கு குறைவான வேகத்தில் பயணிக்குமாறும் வீதி அதிகார சபை மேலும் அறிவுறுத்தியுள்ளது.