(ரொபட் அன்­டனி)

எதிர்க்­கட்சி தலைவர் பதவி  தமது அணிக்கு வழங்­கப்­ப­ட­ வேண்டும் என்ற கோரிக்­கையை விடுக்கும் நோக்கில் தினேஷ் குண­வர்த்­தன தலை­மை­யி­லான குழு­வினர் இவ்­வாரம் சபா­நா­யகருடன் பேச்சு நடத்­த­வுள்­ளனர். 

இதன்­போது  தமது அணிக்கு  70 உறுப்­பி­னர்கள் இருப்­ப­தா­கவும் எனவே   எதிர்க்­கட்சித் தலைவர் பதவி  தமக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றும்  சபா­நா­ய­க­ரிடம் கோரிக்கை விடுக்­கப்­ப­ட­வுள்­ளது. 

இது  தொடர்பில் கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற குழுத்  தலைவர்   தினேஷ் குண­வர்த்­தன குறிப்­பி­டு­கையில், 

பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி எமக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும்.  கூட்டு எதி­ரணி தனி அணி­யாக செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. 

தற்­போது கூட்டு எதி­ர­ணியில் 70 உறுப்­பி­னர்கள் உள்­ளனர்.   ஆனால் 16 பேரைக் கொண்­டுள்ள  தமிழ்க் கூட்­ட­மைப்­புக்கு   எதிர்க்­கட்சித்  தலைவர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. அதனை ஏற்க முடி­யாது.   70 உறுப்­பி­னர்­களைக் கொண்­டுள்ள  கூட்டு எதி­ர­ணிக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.  

இந்­நி­லையில் இது தொடர்பில் நாங்கள் பல தட­வைகள்  சபா­நா­ய­கரை சந்­தித்து   பேச்சு நடத்­தி­யுள்ளோம்.  ஆனால் இது­வரை  எமக்கு எதிர்க்­கட்சி  அந்­தஸ்து கிடைக்­க­வில்லை. 

இந்­நி­லையில் தற்­போது   கூட்டு எதி­ர­ணியில் உள்ள  எம்.பி. க்களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. எனவே    இவ்வாரம் சபாநாயகரை சந்தித்து    எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எமக்கு வழங்குமாறு நாம் கோரிக்கை விடுக்கவுள்ளோம் என்றார்.