பிர­தி­ய­மைச்சர் ரஞ்ஜன் ராம­­நா­யக்க வடக்­குக்கு வந்­து­ உண்­மை­யை­ அ­றிந்­து­ தெற்குக்­கு­ தெ­ரி­யப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­ ஒ­ரு­வ­ராகத் தெரி­ய­வில்லை. நான் அவ­ரை­கா­லஞ்­சென்­ற­ விஜயகுமா­ர­ண­துங்க போன்­ற­ ஒ­ருவர் என்றே முதலில் எண்­ணினேன். என் எண்ணம் தவ­றென இப்­போ­து­ தெ­ரி­கின்­றது என்று வடக்கு முதல்வர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். 

வாராந்த கேள்வி பதில் பகு­தி­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்­டுள்ளார். 

அதில் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது, 

கேள்வி: - வடக்­கை­ வந்­து­ பார்த்­து ­மக்­களின் கருத்­துக்­க­ளை­ அ­றிந்­து­ செல்­லு­மா­று­நீங்கள் விடுத்­த ­கோ­ரிக்­கைக்­கு ­ பா­ரா­ளு­மன்­ற­ உ­றுப்­பினர்  ரஞ்சன் ரா­ம­நா­யக்­க ­ஒத்­துக்­கொண்­டுள்­ளாரே. இது ­பற்றி?

பதில்:- ஆம். அவர் தனி ­சிங்­க­ளத்தில் கடி­தங்­களை அனுப்­பி­யுள்ளார். அவற்­றை ­மொ­ழி­ பெ­யர்க்கக் கொடுத்­துள்ளேன். தொடக்­க­மே ­பி­ழை­போ­ல ­தெ­ரி­கி­றது. 

 நான் அவ­ருக்­கு ­வ­டக்­குக்­கு­ வந்­து­ செல்­லு­மாறு கூறி­யதன் பின்­ன­ரே­ அவர்  விஜ­ய­க­லா­ சம்­பந்­த­மா­க ­அ­வ­ரிடம் சம்­மதம் பெறாமல் அவ­ரு­ட­னா­ன­ க­ருத்துப் பரி­மாற்­றங்­க­ளை­ வ­லைப்­பின்­னல்­க­ளுக்­கு ­வெ­ளி­யிட்­டுள்ளார். இது ஒரு ­குற்­ற­மாகக் கணிக்­கக்­கூ­டி­ய­ வி­டயம். 

குறித்­த­ ந­ப­ரை­ வ­டக்­கிற்­கு­ வ­ரு­மா­று­ அ­ழைத்­ததன் பின்னர் நடை­பெற்­ற­ அவர் சார்­பா­ன­ நி­கழ்­வு­களும் அவர் ­பற்­றி என் கொழும்­பு­ நண்­பர்கள் கூறி­வ­ரு­வதும் அவ்­வ­ள­வு­ ஏற்­பு­டை­ய­தாகத் தெரி­ய­வில்லை.  இவர் வடக்­கு­ வந்­து ­உண்­மை­யை­ அ­றிந்­து­ தெற்­கிற்­கு­ தெ­ரி­யப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­ ஒ­ரு­வ­ராகத் தெரி­ய­வில்லை. நான் அவ­ரை­ கா­லஞ்­சென்­ற­ விஜய் குமா­ர­ண­துங்க போன்­ற­ ஒ­ருவர் என்­றே­ மு­தலில் எண்­ணினேன். என்  எண்ணம் தவ­றென இப்­போ­து ­தெ­ரி­கின்­றது. 

 கேள்வி : வடக்­கு­ மா­காணப் போக்­கு­வ­ரத்­து ­நி­ய­திச்­ சட்­டத்தின் கீழ் வேலை­வாய்ப்­புக்கள் பெறக்­கூ­டிய 63 பேரின் வேலை­வாய்ப்­பை ­மு­த­ல­மைச்சர் முடக்­கி­வைத்­துள்ளார்  என்­பது குறித்து? 

பதில்:- வடக்­கு­ மா­கா­ண­ போக்­கு­வ­ரத்­து­ நி­ய­திச்­சட்­டத்­திற்­கு ­அ­மைய 63 பேருக்­கு­ ஆ­ள­ணி­ அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது.

அனு­பவம் வாய்ந்­த­வர்கள் உள்­வாங்­கப்­படல் வேண்டும் என்­ற­ நோக்கில் வட ­மா­கா­ண ­த­னியார் போக்­கு­வ­ரத்­து­ நி­று­வ­னங்­களில்  கட­மை­யாற்­றிய 38 பேருக்கு பா.டெனீஸ்­வ­ர­னினால் தற்­கா­லி­க­மா­க­ நி­ய­மனம் வழங்­கப்­பட்­டது.

நான் அமைச்சைப் பொறுப்­பேற்­ற­ பின்னர் அவர்­க­ளை ­உள்­வாங்­கி ­நி­ரந்­தரம் ஆக்­கு­வ­தற்­கும்­ மி­கு­தி­யி­னரை (25 பேரை) உரி­ய­மு­றைப்­ப­டி­ தெ­ரி­வு­ செய்­வ­தற்கும் ஆட்­சேர்ப்­புத்­திட்­டத்தை  எம­து­ அ­மைச்­சினால்  முகா­மைத்­து­வ ­சேவைத் திணைக்­க­ளத்­திற்­கு­ அ­னுப்­பி­ய­போ­து­ அ­தற்­கா­ன ­அ­னு­ம­தி­ம­றுக்­கப்­பட்­டது. அதா­வ­து ­தற்­கா­லி­க ­நி­ய­மனம் பெற்­ற­வர்­க­ளை­ உள்­ளேற்­க­ அ­வர்கள் அனு­ம­தி­ த­ர­வில்லை.

இந் நிலையில் 38 பேருக்­கா­ன ­ஆ­ள­ணி­யை­ ஒ­துக்­கி­வைத்­து ­விட்­டு ­மி­கு­தி­ப் பே­ருக்­கு­ வி­ளம்­பரம் கோரி­ வே­லை­ வ­ழங்­கக்­கூ­டி­ய­தாக இல்லை. ஏனெனில் பதி­வு­களின் பிர­காரம் மொத்­த­மாக 63 பத­வி­களும்  வெற்­றி­ட­மா­கவே தற்­பொ­ழு­தும்­ உள்­ளன. ஆனால் 38 பேர் தற்­கா­லி­க­மாகப் பணி­யாற்­று­கின்­றார்கள். எனினும் குறித்த 38 பேரை­யும் ­நி­ரந்­த­ர­மாக்­கு­வ­தற்­கா­ன­ ந­ட­வ­டிக்­கைகள்  எடுக்­கப்­பட்­டு­ வ­ரு­கின்­றன. இந்­த ­ந­ட­வ­டிக்­கை ­முற்­றுப்­ பெற்­றதும் பத்­தி­ரிகை மூலம் விளம்­ப­ரப்­ப­டுத்தி மிகு­தி­ வெற்­றி­டங்­க­ளை ­நி­ரப்­ப­ ந­ட­வ­டிக்­கை­ எ­டுக்­கப்­படும். எத­னையும்  முடக்­கி­வைக்­க­ வேண்­டி­ய­ அ­வ­சியம் எமக்­கில்லை. டெனீஸ்­வ­ர­னினால்  நிய­மிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கு ­நி­ரந்­த­ர ­நி­ய­மனம் வாங்கிக் கொடுக்­கவே இந்தத் தாமதம். அவர்­களைக் கை விட்­டு­விட்டு 63 பத­வி­க­ளுக்கும் புதி­தா­க ­வி­ளம்­ப­ரம் ­கோ­ரினால் அவற்­றை­ உ­ட­னே­யே ­நி­ரப்­ப­ மு­டியும்.

கேள்வி :  முத­ல­மைச்­சரின் அமைச்சின் சுற்­று­லா­ அ­பி­வி­ருத்தித் துறை­சார்ந்­த ­அ­லு­வ­லர்கள் பலர் மத்­தி­ய ­மா­கா­ணத்­திற்­கு­ வ­டக்­கு­ மா­கா­ண ­ச­பையின் நிதியை செல­வ­ழித்­து­ அண்­மையில் சுற்­று­லா­ மேற்­கொண்­ட­மை­ப­ண­வி­ரயம் செய்­வ­தா­ன ­செயல் என்­பது குறித்து? 

பதில்: -சுற்­று­லாத்­து­றை­ அ­பி­வி­ருத்­தி­ திட்டத்தின் கீழ் எமது அமைச்­சுக்கு ஒதுக்­க­பட்ட  நிதியின் கீழ்­ அ­று­ப­து ­மில்­லி­ய­னுக்­கா­ன­ வே­லைத்­திட்­டத்தில் இலங்­கையின்  பிற­ மா­கா­ணங்­க­ளு­ட­னா­ன ­அ­னு­ப­வ­ ப­கிர்­வுக்­கா­ன­ க­ள­வி­ஜ­யமும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதற்­கா­க ­ரூ­பா ­ஒ­ரு­ மில்­லியன்  நிதி ­ஆ­ணைக்­கு­ழு­வினால் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் பிர­த­ம­ செ­ய­லா­ளரின் தலை­மை­யி­லா­ன ­மா­காணத் திட்­ட­மிடல் குழு­வி­னாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. 

உத்­தி­யோ­கத்­தர்­களின் துறை­சார்ந்­த­ ஆ­ளு­மை­ வி­ருத்­தி­யையும் அனு­ப­வப்­ப­கிர்­ வையும் அடிப்­ப­டை­யா­கக் ­கொண்­டு ­வெ­ளி­நாட்­டுப்­ பி­ர­யா­ணங்­களும் உள்­ளூர்ப்­ப­ய­ணங்­களும் அனு­ம­திக்­கப்­பட்­டு ­ந­டை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­து ­வ­ழ­மை­யா­ன­ ந­டை­மு­றை­யாகும். இதற்­கி­ணங்­க­வே­ எ­ன­து ­அ­மைச்சின்  உத்­தி­யோ­கத்­தர்­களும் வட­ மா­கா­ண ­சுற்­றுலாத் துறை­ தொ­டர்­பா­ன­ அ­னு­ப­வ ­ப­கிர்­வு­ க­ள­ வி­ஜயம் ஒன்­றி­னை­யும்­ மேற்­கொண்­டி­ருந்­தனர்.

வட­ மா­கா­ண ­சுற்­றுலாப் பணி­ய­க­மா­னது  07.06.2018 அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­பட்­டது. இதன் முகா­மைத்­து­வ­ ச­பை­யா­ன­து­என்னால் நிய­மிக்­கப்­பட்டு இவர்­களின் முத­லா­வ­து ­மு­கா­மைத்­து­வ­ ச­பைக்­கூட்­ட­மா­னது  14.06.2018 நடை­பெற்­றது. இக் கூட்­டத்தில் சுற்­று­லாத்­து­றையில் விருத்­தி­ அ­டைந்­துள்ள­ மற்றும் அத்­து­றையில் முன்­ன­ணியில் உள்ள ஏனைய மாகா­ணங்­களில்  சுற்­றுலாப் பணி­யகம் அல்­ல­து ­சுற்­று­லா ­அ­தி­கா­ர­ச­பை­ என்­ப­ன ­எவ்­வா­றா­ன ­கட்­ட­மைப்­புக்­களைக்  கொண்­டு ­செ­ய­லாற்­று­கின்­ற­ன­ என்­ப­து­ தொ­டர்­பிலும் அவர்­களால் மேற்­கொள்­ளப்­படும் சுற்­று­லா­ தொ­டர்­பா­ன ­அ­பி­வி­ருத்­தி­ வே­லைகள் தொடர்­பா­கவும் அனு­ப­வப்­ப­கிர்வு மூலம் அறிவைப் பெற்றுக்கொள்­வ­தற்­கா­க­ க­ள ­வி­ஜ­யங்கள் மேற்­கொள்­வ­தெ­ன­தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இத் தீர்­மா­னத்­திற்­க­மைய இம் மாதம் 6,7 மற்றும் 8ந் திக­தி­களில் மத்­தி­ய­ மா­கா­ணத்­திற்­குக்­ க­ள ­வி­ஜயம் மேற்­கொள்­வ­தெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. 

மேற்­ப­டி­க­ள­ வி­ஜ­யத்­திற்­கா­ன­ ம­திப்­பீ­டா­ன­து­ த­யா­ரிக்­கப்­பட்­டு ­அ­து ­அ­னு­ம­திக்­கப்­பட்­டு அம் மதிப்­பீட்டின் பிர­கா­ர­மே­ க­ள ­வி­ஜ­ய­மா­ன­து­ மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இதற்­கெ­ன ­ஒ­துக்­கப்­பட்­ட ­நி­தி­யே­ க­ள­ வி­ஜ­யத்­திற்­கா­ன­ செ­ல­வு­க­ளுக்குப் பாவிக்­கப்­பட்­டது. மேற்­ப­டி­ நி­தி­ செ­ல­வ­ழிக்­கப்­ப­டா­தி­ருந்தால் பணம் திருப்­பி ­அ­னுப்­பப்­படும்.

கேள்வி : முத­ல­மைச்சர் உத­வி­யாளர் ஒரு­வ­ருடன் 2014 தொடக்கம் 2018 வரை­யி­லா­ன­கா­ல­கட்­டத்தில் விமானம் மூலம் கொழும்­பு­ சென்­று­வந்­த­தால்­ இ­ரு­பது இலட்சம் வரை­யி­லா­ன ­பொ­து­மக்­களின் பணம் செல­வு­ செய்­யப்­பட்­டுள்­ளது என்­பது குறித்து? 

பதில்: உத்­தி­யோ­க­பூர்­வ­ க­ட­மையின்  நிமித்தம் வடக்­கு­ மா­கா­ண­ மு­த­ல­மைச்­சரும் பாது­காப்­பு­ பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரும் விமானம் மூலம் 2014ல் இருந்து இன்­று­வ­ரை­ கொ­ழும்­பு ­சென்­று­ வந்­த­மைக்­கா­ன­ வி­மா­னக் ­கட்­டணக் கொடுப்­ப­ன­வு ­மு­த­ல­மைச்­ச­ருக்கு ரூ.1,115,500,   பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ருக்கு ரூ. 694000 ஆகும். 

இந்­த ­வி­ப­ரங்­களை  சட்­டத்தின் கீழ் கேட்­கப்­பட்­ட­போ­து­ நா­னே ­வெ­ளி­யி­டு­மா­று­ ப­ணித்தேன். முத­ல­மைச்சர் விமா­னத்தில் போக­வேண்­டி­ய ­கா­ரணம் துரி­தமும், பாது­காப்பும், உடல் வச­தியும் ஆவன. மற்­றை­ய­ மா­கா­ண ­மு­த­ல­மைச்­சர்கள் அவ்­வா­று ­ப­யணம் செய்­வ­தில்­லை­ என்று கூறப்­பட்­டது. இலங்­கையில் கொழும்பில் இருந்­து­ ஆகக்கூடி­ய­ தூ­ரத்தில் மாகா­ண­ச­பை­ அ­மைந்­தி­ருக்கும் இடம் யாழ்ப்­பா­ணமே. பொது­வா­க­ வா­க­னங்கள் கொழும்­புக்குப்  பயணம் செய்­வ­தானால் ஏழு மணித்­தி­யா­லங்கள் தேவை. ஏழு மணித்­தி­யா­லங்கள்  பயணம் செய்­து­விட்­டு ­அ­தே­நாளோ மறு நாளோ­ உத்­தி­யோ­க­பூர்வ கூட்­டங்­களில் கலந்­து­கொள்­வ­து­ வ­ட மா­கா­ண­ மு­த­ல­மைச்­ச­ருக்­கு­ மட்டும் ஏற்­படக்கூடிய இக்­கட்­டாகும். மேலும் அவ்­வா­றா­ன ­ப­ய­ணத்தில் ஈடு­படும் ஒரே­ த­மிழர் வடக்­கு­ மா­கா­ண ­மு­த­ல­மைச்சர்  மட்­டுமே. அவ­ரே­ நான்­கு ­ம­ணித்­தி­யா­லங்­க­ளுக்­கு ­சிங்­களப் பிர­தே­சங்­களில் பய­ணிக்­க­ வேண்­டி­யவர்.  இலங்­கையில் 75 வய­திற்­கு­மேற்­பட்­ட­ மு­த­ல­மைச்சர் வட­ மா­கா­ண ­மு­த­ல­மைச்சர் மட்­டுமே.பொலிஸார் பாது­காப்­பு­ நி­மித்தம் எனக்­க­ளித்­த­ அ­றி­வு­ரையின் பிர­தி­ப­லிப்­பே­ வி­மான மூலப்­ப­யணம். இதற்­கா­ன­  அப்­போ­தை­ய­ ஆ­ளு­நரின் அனு­ம­தி ­கி­டைத்­தது. அப்­போ­தை­ய­ ஆ­ளுநர் 15 தொடக்கம் 20 வரை­யி­லா­ன­ வி­சே­ட­ அ­தி­ர­டிப்­ப­டை­யி­ன­ரைத் ­த­ம­து­ பா­து­காப்­புக்­கு­ ஈ­டு­ப­டுத்­தினார்.  வாகன எரிபொருள், அதிரடிப்படையினர்  செலவுகள் என்று அவர்களின் செலவு பற்றி எவருமே மூச்சுவிடவில்லை. தற்போது இளந் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்  கூட அவ்வாறான பாதுகாப்பைக் கேட்டுப்  பெற்றுள்ளனர். 

இது இவ்வளவுக்கும் என்னுடன் இரண்டு அல்லது மூன்று பொலிஸாரே உள்ளூரில் பாதுகாப்புக்கு வருகின்றார்கள். ஒருவரையே விமானப் பயணத்தின்  போது கொண்டு செல்கின்றேன். விமானப் படையினரின் விமானப் பயணங்களின்  போது பொலிஸா ருக்குக் கட்டணம்  அறவிட ப்படுவதில்லை. 

தமது பாதுகாப்புப் பற்றிய   இவ்வாறான விபரங்களை எவரும் வெளியிடுவதில்லை. காரணம், முதலமைச்சரை வேண்டாதவர் கள்  இத்தரவுகளை தமக்கு அனுசரணை யாகப் பாவிக்கலாம். ஆனால் மக்கள்  சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும்  முதலமைச்சருக்கு எதிராகத் திட்டமிட்டுப்  பரப்பப்படும் சந்தேகத்தை ஏற்படுத்தும்  கேள்விகளுக்குப் பதில் இறுக்கவும் உண் மையானது வெளிப்படுத் தப்படுகின்றது.

கேள்வி : மேன்முறையீட்டு  நீதிமன்றத் தின் தீர்ப்பு இன்னமும் நடை முறைப்படுத்த ப்படவில்லை என்று கூறப்படுகின்றதே? 

பதில்: சில தீர்மானங்கள் நடை முறைப்படுத்த முடியாதவை. முன்னைய பிரதம நீதியரசர் ஒருவருடன் அவரின் தலைமையின் கீழ் நான் அமர்வில் இருந்தபோது  அவர் தீர்மானம் ஒன்றை அமர்வில் இருந்துகொண்டே விடுக்க  எத்தனித்தார். உடனே நான் இவ்வாறு தீர்மானம்  அளித்தீர்களேயானால்  நடை முறைப்படுத்த முடியாது போய்விடும் என்றேன். அதன் பின் அத் தீர்மானம் திருத்தி வழங்கப்பட்டது. ஆகவே சில தீர்மானங்கள்  நடைமுறைப்படுத்த முடியாதவை.  அதனால்த்தான் உச்சநீதிமன்றத்தின்  உதவியை நாடியுள்ளோம். இது சம்பந்தமாக  ஏற்கனவே நான் மாகாண சபையின்  கடைசி அமர்வின் போது எனது கருத்தை வெளியிட்டுள்ளேன். அதைத் திரும்பவும் இங்கு ஒப்புவிக்க வேண்டிய அவசியம்  இல்லை என்று நம்புகின்றேன்.