திருகோணமலை, சேருநுவர, சீனன்வெளி கடற்கரைப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்கரைப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் எடை 1 கிலோ 416 கிராம் எனவும் அதன் மொத்த பெறுமதி 17 மில்லியன் ரூபா எனவும் திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் அப் பகுதியில் இருந்து 5 போதைப்பொருள் பொதிகளை மீட்டுள்ள பொலிஸார் அது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.