அப்பாவை தேடித் தாருங்கள் ; கண்ணீரில் நனைந்தது மண்டபம்

Published By: Vishnu

15 Jul, 2018 | 06:55 PM
image

2009 இல்  அருட்தந்தையுடன் சரணடைந்த எனது அப்பாவை தேடித்தாருங்கள் என ஒன்பது வயது சிறுமியொருவர் காணாமல்போனோர் அலுவலக அதிகாரிகளிடம் உருக்கமான கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.

இன்று கிளிநொச்சி கூட்டுறவு  மண்டபத்தில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்குமிடையிலான சந்திப்பின்போதே குறித்த சிறுமி மேற்கண்ட கோரிக்கையை காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகாரிகளிடம் விடுத்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் உட்பட பலர் சரணடைந்திருந்தனர். இவர்களை இராணுவத்தினர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச் சென்றிருந்தனர்.

இதன்போது விடுதலைப்புலிகளின் திரைப்பட பிரிவில் கடமையாற்றிய திலக் என்பவரும் சரணடைந்திருந்தார்.  இவ்வாறு சரணடைந்த திலக் என்பவரின் ஒன்பது மகளே இன்று மிக  உருக்கமாக தனது அப்பாவை தேடித்தாருமாறும் தான் இதுவரை அப்பாவின் முகத்தை பார்க்கவில்லை என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்போது கூட்டுறவு மண்டபத்திலிருந்த கிராம அலுவலர்கள்  உட்பட பலர் கண்ணீர்விட்டு அழுதமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக் கொடியை...

2025-02-06 19:11:23
news-image

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய...

2025-02-06 16:24:53
news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37