முதலாவது ஊழல் விசாரணை சிறப்பு நீதிமன்றம் இவ்வாரத்திலிருந்து செயற்படும் எனவும் அதற்கென இலங்கை சட்டக்கல்லூரிக்கு எதிரே நிர்மாணிக்கப்பட்டுள்ள ஊழல் விசாரணை சிறப்பு நீதிமன்றக் கட்டடம் இலங்கை கடற்படையினரால் நேற்று நீதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஊழல் விசாரணைக்கான முதலாவது சிறப்பு நீதிமன்றத்தின் பணிகள் இவ்வாரமளவில் ஆரம்பிக்கப்படும். அத்துடன் மேலும் இரு ஊழல் விசாரணை நீதிமன்றங்களை அண்மைய காலத்தில் அமைக்கப்படும் என்றார்.