அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்குமிடையிலான சந்திப்பு நாளை திங்கட்கிழமை பின்லாந்தில் இடம்பெறவுள்ளது.

பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்லாந்து நோக்கிய பயணமாகவுள்ளார். இதன்போதே அவர் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் நாளை புட்டினை சந்திக்கவுள்ளார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியினரின் மின்னஞ்சல்களை முடக்கியதாக ரஷ்ய உளவுப் பிரிவினர் மீது அமெரிக்க நீதித்துறை திணைக்களம் குற்றம் சுமத்தியது.

இந் நிலையிலேயே ட்ரம்ப், மற்றும் புட்டின் இருவருக்கிடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது. இச் சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானிய செய்தியாளர்களை சந்தித்து பேசிய ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்கும் போது அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து கண்டிப்பாக கேட்பேன் என்று தெரிவித்தார்.

எனவே நாளைய தினம் இடம்பெறும் இச் சந்திப்பின் போது இரு நாடுகளின் பாதுகாப்பு, மற்றும் உறவுகள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.