அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் ஜனாதிபதியாகவேண்டும் என மக்கள் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனின் ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் நான் மீண்டும் போட்டியிடுவது குறித்து முழுமையான எண்ணத்துடன் உள்ளேன் அனைவரும் அதனை விரும்புகின்றனர் என்பதாக நான் உணர்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

என்னை தோற்கடிக்க ஜனநாயக கட்சியில் எவரும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ள டிரம்ப் எனக்கு அந்த கட்சியில் உள்ளவர்கள் அனைவரையும் தெரியும் அவர்களில் என்னை தோற்கடிக்க கூடியவர் எவரும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகளை மீறி அமெரிக்க ஜனாதிபதி பிரிட்டிஸ் மகாராணியுடன் தான் உரையாடிய விடயங்களை பகிரங்கப்படுத்தியமை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பிரிட்டன் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து விலகுவது குறித்து பிரிட்டிஸ் மகாராணியுடன் கதைத்த விடயங்களையே டிரம்ப் பகிரங்கப்படுத்தியுள்ளார்.