ஒஸ்காருக்கு தெரிவான நம் நாட்டு படம்

Published By: Vishnu

15 Jul, 2018 | 10:15 AM
image

2019 ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருதுக்கான தெரிவுப் பட்டியலுக்கு எமது நாட்டில் தயாரிக்கப்பட்ட 'கின்னென் உபன் சீதலய' (Forzen Fire) என்ற படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் இலங்கை திரைப்பட வரலாற்றிலேயே சிறந்த படத்துக்கான ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள முதல் திரைப்படம் என்ற சாதனையை இத் திரைப்படம் பெற்றுள்ளது. அதற்கு முன்னர் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள் என்ற தெரிவுக்கு ஒருசில படங்கள் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து படத்தின் இயக்குநர் அநுராதா ஜசிங்ஹ கருத்து தெரிவிக்கையில், 

உலக புகழ் பெற்ற விருதுக்கான சிறந்த திரைப்படங்களின் வரிசையில் பந்துரைப்பதற்காக இப் படம் முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். சிறந்த படங்களின் தெரிவுக்கான வரிசையில் இந்தப் படம் தெரிவாகியுள்ளது. ஒரு புதிய பயணித்திற்கான ஆரம்பமாகவே இதனை கரருதுகின்றோம். 

இந்தப் படத்தின் கதைக்களமானது ரோஹண விஜேவீரைவைப் பற்றி பேசுகின்றது. ரோஹண விஜேவீரவின் அரசியல் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை என அவர் சிறையிலிருந்து விடுதலையாகியமை தொடக்கம் அவர் கொலை செய்யப்படுகின்றமை தொடக்கம் 12 வருட வாழ்க்கையுடன் பயணிப்பதாக அமைந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்