அநுராதபுரம், செப்புக்குளம் பகுதியில் நேற்று  மாலை 4.20 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகனும் பலியாகியுள்ளனர்.

 நேற்று மாலை ஹொரவபத்தான பகுதியல் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை ,தாய் மற்றும் மகன் ஆகியோர் அவர்களது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது  பாதை ஓரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மூவரும் மிஹிந்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த தந்தையும் மகனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் 

ஹொரவபத்தான பகுதியை சேர்ந்த 8 வயதுடைய மகனும் 41 வயதுடைய தந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் ஹொரவபத்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.