இலங்கை தேசிய கீதம் உள்ளிட்ட பல சிங்கள மொழி பாடல்களையும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஏராளமான பாடல்களையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பாடல்களையும் பாடிய பழம்பெரும் பின்னணி பாடகி ராணி தனது 75 வயதில் காலமானார்.

இவர் 1951 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ரூபவாஹினி திரைப்படத்தில் தனது எட்டாவது வயதில் பாட தொங்கிய இவர், தமிழில் தேவதாஸ், கல்யாணி, கல்யாணம் பண்ணி பார், மோகன சுந்தரம், தர்ம தேவதை, சிங்காரி, எம்.ஜி.ஆர். நடித்த ஜெனோவா, திரும்பி பார், சிவாஜி கணேசனும் எம்.ஜியாரும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி, நல்ல காலம், பணம் படுத்தும் பாடு, குணசுந்தரி, கதாநாயகி, காவேரி, முதல் தேதி, அமர கீதம், மர்ம வீரன், காலம் மாறி போச்சு, பாசவலை, படித்த பெண், அலாவுதீனும் அற்புத விளக்கும், எங்கள் வீட்டு மகாலட்சுமி, பானை பிடித்தவள் பாக்கியசாலி, லவகுசா உள்ளிட்ட பல படங்களில் இவர் கதாநாயகியர்களுக்காக குரல் கொடுத்துள்ளார்.

அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.