(ரி.விருஷன்)

காணாமல் ஆக்கப்பட்டவர்களவி விடயத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அதற்கான அதிகாரம் எமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகததின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காணால் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் யாழ். மாவட்டத்திற்கான அமர்வானது நேற்யை தினம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அமர்வினைத் தொடர்ந்து இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் விசாரிக்கப்படுவார்கள். அந்த விசாரணைகளில் அழுத்தங்களக்கு இடமளிக்கப்படமாட்டாது. பாரபட்சம் காட்டப்படமாட்டாது. 

அத்துடன் ஜனாதிபதியாக இருந்தாலும் நிறைவேற்று அதிகாரத்தை கொண்டிருந்தாலும் சுயாதீனமான விசாரணைகள் நடத்துவதற்கான அதிகாரம் எமக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

மேலும் போர் காலப் பகுதியில் காணாமல்போனவர்கள் விடயத்தில் இராணுவமாக இருந்தாலும் சரி முன்னாள் தமிழீழ விதைலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தாலும் சரி அவர்கள் மீது விசாரணைகள் நடத்தப்படும் என்றார்.