அம்பாறை, பொத்துவில், சர்வோதய புர கொடாவவ குளத்தில் இன்று நீராடச் சென்ற 16 வயதுச் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் 19ஆம் பிரிவு பசறிச்சேனையைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்தவராவார்.

சிறுவன், தனது குடும்ப உறவினர்களுடன் சர்வோதய புர கொடாவவ குளத்தில் நீராடுவதற்கு இறங்கிய போது, நீரில் மூழ்கி இறந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதோடு குறித்த மரணம் தொடர்பிலான 

 மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.