ஆயுர்வேத எக்ஸ்போ – 2018 சர்வதேச சுதேச மருத்துவ கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

Published By: Daya

14 Jul, 2018 | 03:41 PM
image

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் ஆயுர்வேத எக்ஸ்போ - 2018 சர்வதேச சுதேச மருத்துவ கண்காட்சியை  ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று முற்பகல் பார்வையிட்டார். 

இலங்கை தேசிய வர்த்தக சங்கமும் சுகாதார போஷாக்கு சுதேச மருத்துவ அமைச்சும் இணைந்து 7ஆவது முறையாக ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சி நேற்று ஆரம்பமானது. 

ஆயுர்வேத உற்பத்திகளை பயன்படுத்துதல் அவற்றின் சூழல் நட்புடைய தன்மை அதன் தரத்தை மேற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவது இக்கண்காட்சி மற்றும் மாநாட்டின் நோக்கமாகும். 

இம்மாதம் 15ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ள இக்கண்காட்சியுடன் இணைந்ததாக ஆயுர்வேத வைத்தியர்கள், நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்களினால் ஆயுர்வேத மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பல்வேறு கருத்தரங்குகளும் நடத்தப்படவுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண சபை முறைமை என்பது தாம்...

2025-02-10 16:22:10
news-image

முல்லைத்தீவில் மரக்குற்றிக் கடத்தல் முறியடிப்பு :...

2025-02-10 16:26:54
news-image

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2025-02-10 15:52:07
news-image

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

2025-02-10 15:42:53
news-image

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2025-02-10 15:24:38
news-image

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா...

2025-02-10 16:07:35
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11