மது போதையில் அநாகரீகமான முறையில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நடந்து கொண்ட இரு இராணுவ வீரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் வெள்ளவத்தை கடலோரப் பாதுகாப்பு பிரிவில் பணி புரிபவர்களாகும்.

கைது செய்யப்பட்டவர்களை கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.