யாழ்ப்­பாணம், கொடி­காமம் பகு­தியில் இடம்­பெற்ற வாள்­வெட்டு தாக்­குதல் சம்­ப­வத்தில் குடும்­பஸ்தர் ஒருவர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

குறித்த சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

நேற்று அதி­காலை ஒரு மணி­ய­ளவில் கொடி­காமம்- கச்சாய் வீதியில் வீ.சி. ஒழுங்­கையில் உள்ள வீடொன்­றுக்குள் வாள்­களுடன் புகுந்த குழு ஒன்று வீட்டை அடித்து சேதப்­ப­டுத்­தி­யது.

அத்­துடன் வீட்­டுக்குள் புகுந்து 5 பிள்­ளை­களின் தந்­தை­யான சிவ­ராசா சசிக்­குமார் (வயது 44) என்­பவர் மீது சர­மா­ரி­யாக வாளால் வெட்­டி­விட்டுத் தப்பி சென்­றுள்­ளனர். இதனால் படு­கா­ய­ம­டைந்த குறித்த நபர் சிகிச்­சை­க­ளுக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

குறித்த வாள்­வெட்டு சம்­பவம் தொடர்­பாக கொடி­காமம் பொலி­ஸா­ருக்கு உட­ன­டி­யா­கவே முறைப்­பாடு கொடுக்­கப்­பட்­ட­போதும் நேற்றுக் காலை 9 மணி­வரை பொலிஸார் சம்­பவ இடத்­திற்கு வர­வில்லை என பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

 தற்­போது இந்த  வாள்வெட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.