மன்னாரில் பதிவு இல்லாமல் சட்டபூர்வமற்ற முறையில் மீன்பிடி படகுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்தவருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

நீர்கொழும்பைச் சேர்ந்த நபர் ஒருவர் படகு உற்பத்தி செய்யும்போது கொழும்பு கடற்தொழில் திணைக்களத்திடம் படகு உற்பத்திக்கான ஒதுக்கீட்டு இலக்கங்களை பெறாது சட்டபூர்வமற்ற முறையில் படகுகளை உற்பத்தி செய்துள்ளார்.

இவற்றில் இரு படகுகள் மன்னாரில் விற்பனை செய்தபொழுது மன்னார் கடற்தொழில் திணைக்களத்தால் கண்டுபிடிக்கப்பட்டு இவருக்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த  வழக்கானது நேற்று மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.Nஐ.பிரபாகரன் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது குறித்த நபருக்கு  தண்டமாக ரூபா இருபத்தையாயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.