குடும்பமாக ஹெரோயின் பொதிகளை தயார் செய்வதில் ஈடுபட்டிருந்தவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மகரஹம வீரமாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து இவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் இரு ஆண்களை ஹெரோயின் போதைப்பொருள் பொதிகளை தயார் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பொலிஸார் தங்களிற்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் குறிப்பிட்ட வீட்டை சுற்றிவளைத்த வேளை இவர்கள் உள்ளே ஹெரோயினை பொதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததை கண்டுபிடித்தாக குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட குடும்பத்தவர்கள் நீண்டகாலமாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.