கொழும்பு நகரில் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எலிகளால் பரவும் தொற்றுநோய்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எலிகளை கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை கொழும்பு மாநகர சபை அமுலாக்கவுள்ள திட்டமிடப்பட்டுள்ளது.எலிகளை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை பெறுவதற்கு 0112 503 550 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது.